பிட் காயின் 
உள்ளூர் செய்திகள்

அண்ணாநகரில் பிட் காயினில் முதலீடு செய்வதாக ரூ.1.8 கோடி மோசடி- 2 பேரிடம் விசாரணை

ரவிநபேரா இன்னும் கூடுதலாக பணத்தை முதலீடு செய்வதாக பிரகாசிடம் தெரிவித்தார். இதையடுத்து பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் புனேயில் இருந்து சென்னை வந்தனர்.

மாலை மலர்

சென்னை:

அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி நபேரா. இவருக்கு புனேவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது பணத்தை பிட்காயினில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று பிரகாஷ் தெரிவித்தார்.

இதனை நம்பி ரவிநபேரா ரூ.1 கோடியே 80 லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் கூடுதலாக பணம் கிடைக்கவில்லை. மேலும் அசல் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுபற்றி ரவிநபேரா திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரவிநபேரா இன்னும் கூடுதலாக பணத்தை முதலீடு செய்வதாக பிரகாசிடம் தெரிவித்தார். இதையடுத்து பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் புனேயில் இருந்து சென்னை வந்தனர். அவர்கள் விமான நிலையம் அருகே ஓட்டலில் தங்கி இருந்தனர்.

இதுகுறித்து ரவிபேரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பிரகாஷ் மற்றும் சுரேசை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.