கோவை:
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்ததும் பல்வேறு கட்டுப்பாடுக ளுடன் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. கொரோனா கால கட்டத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்தன. இது குறித்து கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் கடந்த ஆண்டு 146 குழந்தை திருமணங்கள் நடை பெற்றன. இதில் 99 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இது போல் கடந்த 2 மாதங்களில் மட்டும் 23 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அதில், 15 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காரணமாக குழந்தை திருமணத் தின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும் நிலையில், வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இனி வரும் நாட்களில் குழந்தை திருமணம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்க ளில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.