மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ள இடத்தை அமைச்சர் முருகன் நேரில் ஆய்வு 
உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ள இடத்தை அமைச்சர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் முட்டுக்காடு பகுதியில் புதியதாக மீன் பிடி துறைமுகம் அமைக்க உள்ள இடத்தை ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மீனவர், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

மாலை மலர்

மரக்காணம்:

மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் முட்டுக்காடு பகுதியில் ரூ.235 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ஒன்றிய மற்றும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்து அதற்கான முதல் கட்டப்பணிகளையும் செய்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக இங்கு நடைபெற்று வந்த அனைத்து முதல்கட்டப்பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் முட்டுக்காடு பகுதியில் புதியதாக மீன் பிடி துறைமுகம் அமைக்க உள்ள இடத்தை ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மீனவர், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது மீன்வளத்துறை, பொதுப்பணிதுறை, வருவாய்த்துறை, மீனவர் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.