உள்ளூர் செய்திகள்

தாம்பரம்-திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இன்று இரவு இயக்கப்படுகிறது

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பு.தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்படும்.

சென்னை:

ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்களில் இடங்கள் நிரம்பி வழிவதால் தெற்கு ரெயில்வே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக சென்று திருச்சிக்கு நாளை காலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோல திருச்சியில் இருந்து நாளை (3-ந் தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்து சேரும்.