புளிகளை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள். 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே புளி விளைச்சல் அமோகமாக உள்ளதால் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள்

திண்டுக்கல் அருகே புளி விளைச்சல் அமோகமாக உள்ளதால் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி மற்றும் நத்தம் ஒன்றியத்தில் அதிக அளவில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. வேம் பார்பட்டி, கொசவப்பட்டி, தவசிமடை, வீரசின்னம்பட்டி, புகையிலைப்பட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி செய்துள்ளனர்.

தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை அறுவடை காலம் ஆகும். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயி அபுதாகீர் கூறுகையில், தற்போது புளி விளைச்சல் நன்றாக உள்ளது. இதனால் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றோம்.

மேலும் ஆந்திரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து Ð கிலோ முதல் 10 கிலோ வரை பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

விதை இல்லாத புளி ஒரு கிலோ ரூ.70க்கும், விதையுடன் ரூ.25க்கும் விற்கப்படுகிறது. மேலும் பேக்கிங் செய்யப்படும் புளி 10 கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது. இதனால் ஓரளவு லாபம் கிடைக்கிறது என்றார்.