சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையை சேர்ந்தவர் ஷாலினி (வயது 35). இவருடைய கணவர் லோகநாதன். பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (12), கோகுல கிருஷ்ணன் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லோகநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஷாலினி சந்தேகம் அடைந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு ஷாலினிக்கும், கணவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஷாலினி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர் லோகநாதன் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தார். பின்னர் ஷாலினி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.