நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டபோது எடுத்த படம். அருகில் சமுதாய மண்டல தலைவர் சின்னச்சாமி மற்றும் பலர் உள்ளனர். 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் கோவிலில் கம்மவார் நாயுடு மகாஜனம் சங்கம் சார்பில் சுருள் அழைப்பு நிகழ்ச்சி

வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து மண்டகப்படிதாரர்கள் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். விழாவை முன்னிட்டு கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மண்டகப்படி தாரர்களான கம்மவார் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று சுருள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கம்மவார் நாயுடு மகாஜன சங்க மண்டல தலைவர் சரஸ்வதி ஓட்டல் சின்னசாமி, நகர தலைவர் பொறியாளர் அசோக்குமார், செயலாளர் வெங்கடபதி, பொருளாளர் சங்கரநாராயணன், ஆர்.வி.எஸ். துரைராஜ், டாக்டர்கள் சுப்பாராஜ், போத்திராஜ், சாந்தி, அம்சவேணி, வக்கீல்கள் மாதவரம், புஷ்பராஜ், பிரதாப் மற்றும் வக்கீல்கள், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சமுதாய மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.