உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி சக்தி மலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அரவேணு,

கோத்தகிரியில் சக்தி மலையில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் சூரா சம்ஹார விழா நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடந்தது. மதியம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

SCROLL FOR NEXT