விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.  
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள் வழங்கப்பட்டது.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தி ல் வேளாண்மை –உழவர் நலத்துறை சார்பில் அட்மா, மாநில விரிவாக்க திட்டங்க ளுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் 2023-24 செயல்விள க்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் சாக்கோ ட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்கள், 5 பயனாளிகளுக்கு தார்பா ய்கள், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள், 1 பயனாளிக்கு பருத்தி கருவி ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ், உதவி தொழில்நுட்ப மேலாள ர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.