கைதான இருவரை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே சப்- இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது

நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (வயது 24), விஜயபாரதி வயது (24) ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஏழுமலை. இவர் கடந்த 8 -ந்தேதி நல்லாத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (வயது 24), விஜயபாரதி வயது (24) ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை இருவரையும் விசாரித்தார். அப்போது உதயகுமார், விஜயபாரதி ஆகியோர் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து கச்சிராய பாளையம் போலீஸ் நிலை யத்தில் ஏழுமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த 2பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT