உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம் அருகே ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல்

கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT