உள்ளூர் செய்திகள்

வடலூரில் லாரி மோதி மாணவன் பலி

முகமதுரிதுவான் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

மாலை மலர்

கடலூர்:

வடலூர் ஆபத்தாணபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ஹஜ்முகமது மகன் முகமதுரிதுவான் (வயது 15). இவர் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடலூர் ரெயில்வே கேட்டுக்கு முன் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி யதில் பலத்த காயமடைந்த முகமது ரிதுவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.