வடமதுரை:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நீதிராஜன். தச்சு தொழிலாளி. இவரது மகன் ரூபன்(17) ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
ரூபன் பாடம் படிக்காமல் அடிக்கடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் நீதிராஜன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரூபன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த எரியோடு இன்ஸ்பெக்டர் சத்ய பிரபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.