சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பம். 
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நிறுத்தம்

தேனி மாவட்டம் கூடலூரில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாலை மலர்

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக கேரள மாநிலம் குமுளிக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கூடலூர் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டது.

தற்போது கூடலூர் வடக்கு தியேட்டர் பகுதியில் புறவழி இணைப்புச் சாலை பணி முடிவடைந்த நிலையில், தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை யுடன் இணையும் பகுதியில் மின்கம்பம் இடையூறாக உள்ளது.

இதனால் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிக்கு நெடுஞ்சாலைதுறையினர் கடிதம் கொடுத்தனர். இருப்பினும் மின்கம்பத்தை மாற்ற மின் வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதனால் சாலை விரிவாக்க பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கேரள மாநிலத்தை இணைக்கும் பகுதியாக உள்ளதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைவிரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.