உள்ளூர் செய்திகள்

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்: கணவன்-மனைவி தற்கொலை

மோகன்பாபு தனது மனைவியுடன் சேலம் வந்தார். சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

சேலம்:

கோவை பீளமேடு கோபால்நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவருடைய மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மோகன்பாபு பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், மோகன்பாபு தனது மனைவியுடன் சேலம் வந்தார். அங்கு புதிய பஸ் நிலையம் அருகே சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்தநிலையில், இருவரும் திடீரென தங்கும் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை ஏற்பட்டதாகவும், இதனால் விரக்தி அடைந்த மோகன்பாபு, தனது மனைவியுடன் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டது தெரிய வந்தது.