உள்ளூர் செய்திகள்

தச்சநல்லூரில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - மேயரிடம் கோரிக்கை

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினர்.

தச்சநல்லூர் ஆனந்த புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

நான் நயினார்குளம் நீர்பாசன உதவி செயலாளராக இருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.

தற்போது எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டித்தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT