மத்திய இணை மந்திரி எல் முருகன், சிலம்பு வீராங்கனைகள் 
உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டி- வீராங்கனைகளுக்கு மத்திய இணை மந்திரி பாராட்டு

இந்தப் போட்டித் தொடரில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாலை மலர்

சென்னை:

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையொட்டி, உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் சென்னையில், மாநில அளவிலான சிலம்பம் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இந்த போட்டியில் இன்று சிறப்பு விருந்திரான  மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டார். 

போட்டியை கண்டு களித்த அவர், சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பாராட்டினார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.