மின் அலங்கார பெரிய தேர்பவனி நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட பரிபாலர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17ந் தேதி நடைபெற உள்ளது.