உள்ளூர் செய்திகள்

அனிதா குமரன் பள்ளியில் விளையாட்டு விழா

தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இந்நிகழ்சிக்கு திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், துணை தாசில்தார் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தாளாளரும், முதல்வருமான சோ. மீனா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகஅதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்திஜெய ஸ்ரீ, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கிருபைமேரி கிறிஸ்டி பாய், துணைத் தலைவர் அதிமுத்து என்ற காமராஜர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT