சிறப்பு யாகம் நடந்தபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மழைக்காக சிறப்பு யாகம்

போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

திருச்செந்தூர்:

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.கிணறுகளில் வெகுவாக தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது

எனவே மாநிலம் முழுவதும் நல்ல பருவ மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஷ்டா மரிய தங்கம் தலைமையில், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளைகள் செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவனடியார் சிவமுருகன், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், தொழில் அதிபர் நோவா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT