உள்ளூர் செய்திகள்

வரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

வரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்திப்பெற்ற வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது வரதராஜப்பெருமாளுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.