பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து விநாயகர், பகவதிஅம்மன், மற்றும் முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.