சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்.  
உள்ளூர் செய்திகள்

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்படும்.சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாகும்.

அன்று துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT