உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

போக்குவரத்து கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கபட்டுள்ளன.

கோத்தகிரி,

தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இருந்து விடுமுறைக்காக மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் அதிக பயணிகள் செல்ல கூடும் என்பதால் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்க பட்டுள்ளன.

இதில் விடுமுறைக்காக கோத்தகிரி பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்க்காக உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்போது 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கோத்தகிரி போக்குவரத்து கிளை மேலாளர் ஞானபிரகாஷம் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளியன்று பயணிகள் அதிக அளவு பயணம் செய்ய நேரிட்டால் உடனடியாக இயக்க மேலும் சில பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

SCROLL FOR NEXT