சிறப்பு அலங்காரத்தில் பாலவடரங்கநாதர். 
உள்ளூர் செய்திகள்

பாலவடரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை.சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை.

சீர்காழி:

கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரங்கநாயகி உடனாகிய பாலவடரங்கநாதர் கோயில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பால வடரங்கநாதர் மற்றும் ரங்கநாயகிக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அங்குள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT