உள்ளூர் செய்திகள்

கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கணவரை கொல்ல முயன்ற மனைவி

சிங்கம்புணரி அருகே கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொல்ல முயன்றார். நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சேவுகப்பெ ருமாள்(வயது35). இவரது மனைவி ராணி(30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமை யாகிய சேவுகப்பெருமாள், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வந்துள்ளார்.

நேற்றுமுன்தினமும் சேவுகப்பெருமாள் மது குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ராணியை தாக்கி உள்ளார். பின்னர் அவர் போதையில் தூங்கிவிட்டார்.

இந்தநிலையில் கணவர்மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துவந்த ராணி, தூங்கிக்கொண்டிருந்த சேவுகப்பெருமாள் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கொலை செய்ய முயன்ற ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT