உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் அணிக்கு மாணவர்கள் தேர்வு

கிரிக்கெட் அணிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

காரைக்குடி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று (4-ம் தேதி) முதல் வருகிற (7ம் தேதி) வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது.

இதற்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட அணித்தேர்வு அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் செல்லப்பன் வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பைச் சேர்ந்த ஏ.கனிஷ்கர், எஸ்.கே.கவுதம் பாலாஜி, 8-ம் வகுப்பை சேர்ந்த டி.நவீன் ராகவன், சி.சித்தார்த், எஸ்.கைலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான மாணவர்களையும் மற்றும் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராகவனையும், பள்ளித் தாளாளர் சத்யன், பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்யன், பள்ளியின் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் ராணிபோஜன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT