உள்ளூர் செய்திகள்

இளையான்குடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

இளையான்குடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது. கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இயற்பியல் துறை மாணவ-மாணவிகள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கினர். இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அல்ஹாஜ், நசீர் கான், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் 

SCROLL FOR NEXT