உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

மானாமதுரை

மானாமதுரை நகராட்சி வளமீட்பு பூங்காவில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுரைக்காய், பூசணிக்காய், பலாப்பழம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT