உள்ளூர் செய்திகள்

புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த பள்ளியின் மாணவி காவியதர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி சுபஸ்ரீ 576 மதிப் பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரவின் ரஸ்மிதா 569 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள் ளார். கணிப்பொறியியல் பாடத்தில் 6 பரும், அக்கவுண்டன்சியில் 4 பேரும், காமர்ஸ்சில் 3 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.