உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம், அ.திருவுடை யார்புரம் உள்வட்டம், முள்ளிரேந்தல் குரூப், அ.நெடுங்குளம் கிராமத்தில், வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT