உள்ளூர் செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை நாலுகோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சட்டஉதவி மையம், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் இணைந்து சிவகங்கை வட்டம் நாலுகோட்டை கிராமத்தில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவை பற்றி விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.

மாவட்ட வக்கீல் சங்க செயலர் சித்திரைசாமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியில் ஆய்வாளர் கண்ணதாசன், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராணி நன்றி கூறினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மஞ்சுளா, செல்வி, பெண் காவலர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT