உள்ளூர் செய்திகள்

நெற்குப்பையில் சுதந்திர தின விழா

நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

SCROLL FOR NEXT