உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ.யில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ஐ.டி.ஐ.யில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலு வலகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை

காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கட்ட கலந்தாய்வு முடிந்து, தற்போது வருகிற 31-ந்தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையத்தில் தற்போது டர்னர், மெஷி னிஸ்ட், மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கில் போன்ற 2 வருட தொழிற்பிரிவுகளுக்கும், கோபா, இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவு களுக்கும் ஒரு சில இடங்களே காலியாக உள்ளது.

எனவே மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவர்கள் உடனடியாக காரைக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேரலாம். இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாணவர் களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை யில்லா மிதிவண்டி, விலை யில்லா சீருடைகள், விலை யில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள், போன்றவை வழங்கப்படும். மேலும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750/- உதவித் தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750/- உதவித் தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாண வர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காரைக்குடி பகுதியில் உள்ள மாண வர்கள் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT