உள்ளூர் செய்திகள்

முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம்

முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோர் பங்கேற்று குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT