மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது சிறுகுடி. இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தற்போது சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி வந்து விட்டாலும் பஸ் வசதி இல்லாமல் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள முத்தனேந்தல் அல்லது இடைக்காட்டூர் வந்து சிறுகுடி மக்கள் பஸ் ஏறி வெளியூர் சென்று வந்தனர்.
இது குறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசியிடம் உங்கள் முயற்சியால் சிறுகுடிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 75 வருடமாக போக்குவரத்து வசதி இல்லாத சிறுகுடி கிராமத்திற்கு புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் கிராம மக்களோடு பஸ்சில் பயணமும் செய்தார். இதில் தி.மு.க. ஒன்றிய குழு துணை தலைவர் முத்துசாமி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா சிவச்சந்திரன், மலைச்சாமி, நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.