உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம்

அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்

எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT