ஆடி பவுர்ணமியை முன்னிட்டு காளையார்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

1008 திருவிளக்கு பூஜை

காளையார்கோவில் அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிரமம் கிராமத்தில் பழமையான கொங்கேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இங்குள்ள ஏழுமுக காளியம்மன் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமி அன்று உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த ஆண்டு நாடு தனது 75-வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாட உள்ள நிலையில் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நல்லுறவை பேணி வாழவும் உலக நண்மை வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT