மின்தடை 
உள்ளூர் செய்திகள்

மின் தடை

தேவகோட்டை பகுதிகளில் 5ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.

மாலை மலர்

தேவகோட்டை

சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்  (5ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை,  கண்ணங்கோட்டை, பெரிய காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை   பனங்குளம்,  மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர்  ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.