உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்

கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில் நடந்தது. செயலாளர், அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

நிகழ்ச்சியில் நெடுகுளா கிளைக்கழக செயலாளர் மோகன், ஒன்றிய பிரதிநிதி மணி, மாவட்ட விவசாய அணி சுண்டட்டி முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண்குமார், குன்னூர் நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.