உள்ளூர் செய்திகள்

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் திருப்பூருக்கு அனுப்பி வைப்பு

சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT