உள்ளூர் செய்திகள்

அரவைக்காக 1000 டன் நெல் அனுப்பி வைப்பு

தஞ்சை ரெயில் நிலையத்திற்கு 1000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி கொண்டுவரப்பட்டன.சரக்கு ரெயிலில் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகின்றன.

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பப்படும்.

இந்த நிலையில் இன்று தஞ்சை ரயில் நிலையத்திற்கு 1000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி கொண்டுவரப்பட்டன.

பின்னர் அந்த நெல் மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.