மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தாழையூர் லட்சுமி கவுண்டனூரில் அரசுக்கு சொந்தமான ஏரி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் மனைவி சரசு, கணேசன் மனைவி பெருமாயி, செல்லப்பன் மகன் கணேசன் ஆகியோர் தீவனப்புல் பயிரிட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்த நிலத்தினை அளவீடு செய்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். இதை தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
சங்ககிரி தாசில்தார் பானுமதி தலைமையில் எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.