தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி சேலம்-கிருஷ்ணகிரி சாலை பிரிவு ரோட்டில் அதியமான்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அனுமதியின்றி நுரம்பு மண் கடத்தியது தெரியவந்தது. உடனே டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நுரம்பு மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வண்டியை ஓட்டிவந்த முண்டாசுபுரவடை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், பச்சியப்பன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வண்டியின் உரிமையாளரான மணிகண்டன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.