திண்டுக்கல்:
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியனுக்கு சரக்கு வாகனத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், முருகன், சரவணன் ஆகியோர் மேற்கு தாலுகா அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனத்தில் இருந்த 18 மூட்டைகளில் பதப்படுத்திய 420 கிலோ துண்டு புகையிலை மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.