தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஆழ்வார் திருநகரி யூனியன் அலுவல கத்தில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகோலியா வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. விழாவில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்ச ந்திரன், ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திரு நகரி யூனியன் ஆணை யாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், நவீன்குமார், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் மணி மேகலை ஆனந்த், கவுன்சிலர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மகர பூசணம், நகர செயலா ளர் முத்து வீரபெருமாள், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விஜ யன், வட்டார மருத்துவ அலு வலர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.