வடமதுரை:
திண்டுக்கல் அருகே பாலம் ராஜக்காபட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவருக்கும் அய்யலூர் கருவார்பட்டியை சேர்ந்த கார்த்திக் பிரபு (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
2 பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் அபிஷேக் (23) இவருக்கும் எரியோடு பகுதியை சேர்ந்த பராசக்தி (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் 2 காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயராணி 2 காதல் ஜோடி-களின் பெற்றோர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அ-னுப்பி வைத்தனர்.
சாணார்பட்டி சேத்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (21) இவரும், அய்யலூர் புத்தூர் பகுதியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்-கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர். சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் அவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.