கொடைக்கானல்:
கொடைக்கானலில் பல ஆண்டுகளுக்கு முன் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர் வத்தலக்குண்டு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனால் கொடைக்கானல் மலைவாழ் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். கொடைக்கானல் பொதுமக்களின் அசவுகரியத்தை போக்கும் வகையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன், மதுரை மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் பேத்துப்பாறை பகுதியிலும் இடஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.