கைதானவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் கைது

தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் தாக்கினர். உடனே அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்வின். (வயது 30). தொழிலாளி.

மர்ம நபர்கள்

இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் தாக்கினர். இதில் அவருக்கு கையில் வெட்டுபட்டு வலியால் அலறினார். உடனே அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து கிங்ஸ்வின் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்ட னர்.

கொலை மிரட்டல்

இதில் தூத்துக்குடி அழகேசபுரம் சோலையப்பன் என்ற அபினாஷ் (19) மற்றும் தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (20) ஆகிய இருவரும் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.