வடகாடு தொடக்கப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டன.உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல்.

திருத்துறைப்பூண்டி:

முத்துப்பேட்டை தாலுகா, ஜாம்புவானோடை வடகாடு தொடக்கப்பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், உதவி ஆசிரியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியர் மகாலட்சுமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள், காகித மடிப்புகலை, பாடல்கள், நடனம், மேஜிக், கைரேகை, ஓவியங்கள், உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல் போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.

பயிற்சியின் முதன்மை கருத்தாளர்களாக வானவில் மன்ற லாவண்யா மற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மங்கை, கல்பனா ஆகியோர் செயல்பட்டனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.